ஒடிசாவில் ஓய்வூதிய பணத்தை வாங்க 70 வயது மூதாட்டி ஒருவர் உடைந்த நாற்காலி உதவியுடன் கொளுத்தும் வெயிலில் வெறுங்காலுடன் வங்கிக்கு நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஓய்வூதியத்தை வாங்க ஒடிசாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தள்ளாடும் வயதிலும் நாற்காலியை ஊன்றுகோலாக பயன்படுத்தி நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மனிதநேயத்துடன் வங்கிகள் செயல்படுமாறு அறிவுறுத்தினார். தற்போது இதற்கு பதில் அளித்துள்ள எஸ்பிஐ வங்கி, வயது மூப்பு காரணமாக அவரது கைரேகை பதிவாகவில்லை. அடுத்த மாதம் முதல் ஓய்வூதியம் அவரது வீட்டிற்கு சென்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.