அசாம் மகளிர் அணி செயலாளர் அங்கித தத்தா. இவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பி‌.வி. ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றசாட்டினை கூறினார். அதாவது பாலின அடிப்படையில் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், இதுகுறித்து கட்சி மேலிடத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அங்கித தத்தா கூறி இருந்தார். அங்கித தத்தாவுக்கு கடந்த காலங்களில் சாரதா சிட் பண்டு ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த வழக்கிலிருந்து தப்பிக்க அசாம் முதல்வர் ஹிமந்த பிஷ்வாவை நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி செயலாளர் மீது அங்கித தத்தா குற்றம் சாட்டிய நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஷ்வா அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதாவது அசாமின் மகள் அங்கித தத்தா. அவர் கூறியது காங்கிரஸ் கட்சியின் விவகாரம். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் சிஐடி அல்லது போலீசாரின் தலையீட்டுக்கு தேவை இருக்காது என கூறினார். இது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியாக அமைந்த நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் அங்கித தத்தா ஈடுபட்டதாக கூறி அவரை 6 வருடங்கள் கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.