காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசாரும் ராணுவத்தினரும் வலை வீசி தேடி வருகிறார்கள். தீவிரவாதிகள் தாக்கியதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்துள்ளதால் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்துள்ளனர்.

எங்கள் சகோதரர்கள் உயிரிழந்த போது நாங்கள் எப்படி ரம்ஜான் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட முடியும். இந்த ரம்ஜான் பண்டிகை எங்களுக்கு தேவை இல்லை எனக் கூறி அவர்கள் பண்டிகையை கொண்டாட வில்லை. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் மசூதிக்கு சென்று தொழுகை மட்டும் நடத்தியுள்ளனர். மேலும் நாட்டின் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் தவிர்த்தது அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.