பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, பண்டிகை தினங்கள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில், வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுவதற்கு பதில் அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் இந்த  நடைமுறை விரைவில் வர உள்ளதாக கூறப்படுகிறது. Business Line வெளியிட்டுள்ள தகவலில் தற்போது உள்ள வேலை நேரத்தை கூடுதலாக 45 நிமிடங்கள் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.