எஸ்பிஐ வங்கி எனது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் தற்போது யோனா என்ற செல்போன் செயலியை பயன்பாட்டிற்காக வைத்துள்ளது. இந்த செயலி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய யோனா செல்போன் செயலியை புதுப்பித்து பல்வேறு புதிய வசதிகளுடன் புதிய யோனா ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் யுபிஐ பரிவர்த்தனை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

யுபிஐ வாயிலாக மற்றவர்களுக்கு பணத்தை அனுப்ப, ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தலாம். அது மட்டுமில்லாமல் புதிய வங்கி கணக்குகளை இந்த செயலியின் மூலமாக எளிதில் தொடங்கி விடலாம் கடன் வசதிகளும் இதில் இருக்கிறது. வீட்டு கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கும் இந்த ஆப் வழியாகவே விண்ணப்பிக்கலாம்.