வீடுகளில் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர் இயக்கம் மற்றும் சிலிண்டர் இயக்கம் போன்றவற்றை ஆய்வு செய்ய ஏஜென்சி ஊழியர்கள் 200 ரூபாய் கட்டணமாக வசூலித்தனர். ஆனால் இனி சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே இலவசமாக சோதனை செய்து தங்களின் மொபைல் போன் செயலியில் பதிவு செய்வார்கள்.