நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதத்தில் இருந்தே அதிகமான வெயில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 42 டிகிரி செல்சியஸ் அதாவது 108 டிகிரி பாரின்ஷீட் வெப்பம் பதிவானது.

இந்த நிலையில் கடலோரம் அல்லாத வடமாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதியம் 12 மணியிலிருந்து 3 மணிக்குள் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.