முந்தைய பா.ஜ.க அரசால் நிறைவேற்றப்பட்ட மத மாற்றம் தடை சட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா முடிவுசெய்திருக்கிறது. சமீபத்தில் கர்நாடகாவில் பொறுப்பேற்றுக்கொண்ட காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் மத மாற்றத்தை தடுப்பதை நோக்கமாக கொண்ட சட்டத்தை ரத்து செய்கிறது.

முந்தைய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மதமாற்ற தடை சட்டத்தை திரும்பப் பெற, முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் கேபி ஹெட்கேவார் தொடர்பான பாடத்திட்டம் கைவிடப்பட்டு இருப்பதாக கர்நாடக கல்வி அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.