மத்திய-மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அந்த வகையில் வருமானத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களின் நலனுக்காக பஞ்சாப் மாநில அரசு சூப்பர் திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தி இருக்கிறது. இத்திட்டம் வாயிலாக சமூகத்தின் அடித்தட்டு நிலையிலுள்ள பெண்கள் கூட பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.51 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்களின் திருமணத்தின்போது இந்த உதவித்தொகை பயன் உள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உதவித்தொகை பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் என பலதரப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பாக இத்திட்டத்தில் ரூ.21 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ரூ. 51 ஆயிரம் வழங்க அரசாணை வெளியாகியிருக்கிறது.

இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய பயனாளிகள் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பஞ்சாப் அரசின் அதிகாரபூர்வமான இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அதோடு விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்கள், இடஒதுக்கீட்டு பிரிவு விவரங்கள், வங்கி கணக்கு விபரங்கள் என அனைத்தையும் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு, அதனை பஞ்சாப் மாநில அரசு பரிசீலனை செய்து தகுதிவாய்ந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.