உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப். அந்தவகையில்  புதிதாக வாட்ஸ் அப் குரூப் கிரியேட் செய்யும்போது எவ்வித பெயரும் இல்லாமலேயே உருவாக்கம் செய்யும்படியான அப்டேட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், whatsapp குரூப்பில்  Save செய்துள்ள நண்பர்களின் பெயர் காண்பிக்கப்படாது. அதாவது, whatsapp குரூப்பில் நண்பர்களின் செல்போன்  எண் மட்டுமே தெரியும்படியான அம்சமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய அப்டேட் தற்போது வாட்ஸ் அப் டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் இந்த அப்டேட் கிடைக்கும்.