ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தாலிபன் அரசு தற்போது புதிய மற்றும் அதிர்ச்சிகரமான சட்டங்களை இயற்றியுள்ளது. இதன்படி, தங்களது மனைவிகள் அல்லது அடிமைகளாக இருக்கும் பெண்களை, உடலில் காயங்கள் ஏற்படாத வண்ணம் தண்டிப்பதற்கு கணவர்கள் மற்றும் முதலாளிகளுக்கு தாலிபன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளையில், இத்தகைய தண்டனைகளின் போது பெண்களுக்குக் காயம் ஏற்படும் பட்சத்தில் மட்டும், சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் மற்றுமொரு கடுமையான சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கணவரின் அனுமதியின்றி பெண்கள் தங்களது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றால், அவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தாலிபன் அரசு எச்சரித்துள்ளது.

மேலும் ஏற்கனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பல்வேறு கட்டுப்பாடுகளைச் சந்தித்து வரும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு, இந்த புதிய சட்டங்கள் மேலும் பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன