இந்தியாவில் தற்போது 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் 25 நாட்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் என மொத்தம் 8 வாரங்களுக்கான கையிருப்பு கைவசம் உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று விரிவான ஆய்வு நடத்தினார்.

மேற்காசிய நாடுகளிலிருந்து அதிகளவில் எரிபொருளை இறக்குமதி செய்யும் இந்தியா, தற்போது நிலவும் உலகளாவிய சூழலைக் கருத்தில் கொண்டு, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைப் பெற மாற்று வழிகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யத் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், கையிருப்பை அதிகரிக்கத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.