பொதுவாகவே வெளி உணவுகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் மனதைக் குமட்ட வைப்பதோடு, இனி வெளி உணவுகளைத் தொடவே அச்சப்படும் வகையில் அமைந்துள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், சாலையோரம் பாப்கார்ன் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், தனது கடையை அப்படியே விட்டுவிட்டு சாலையின் மறுபுறம் சென்று சிறுநீர் கழிக்கிறார். சிறுநீர் கழித்து முடித்தவுடன், அவர் தனது கடைக்குத் திரும்பி வருகிறார். அவர் வந்தவுடன் கைகளைச் சுத்தமாகத் தேய்த்துக் கழுவுவார் என்று பார்த்தால், அங்கிருந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
View this post on Instagram
அந்த நபர் தனது கைகளைச் சிறிதளவு கூட கழுவாமல், அப்படியே பாப்கார்ன்களை பாக்கெட்டுகளில் அடைக்கத் தொடங்குகிறார். சிறுநீர் கழித்த அதே கைகளால் எவ்வித கூச்சமும் இன்றி அவர் பாப்கார்ன்களைக் கையாள்வது காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்த மொத்தச் சம்பவத்தையும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து ஒருவர் தனது கைப்பேசியில் ரகசியமாகப் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் ‘@360sabya’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. தற்போது வரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்த்த பலரும், “இனிமேல் வெளியில் எதையும் வாங்கி உண்ணக்கூடாது” என கருத்து தெரிவித்து வருகின்றனர். “இது போன்ற நபர்களால் தான் தொற்று நோய்கள் வேகமாகப் பரவுகின்றன, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பளபளப்பான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகள் அனைத்தும் சுத்தமானவை அல்ல என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
