சென்னை கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்திற்குச் சென்ற தவெக தலைவர் விஜய், அங்கு ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் பாதியிலேயே திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததும், தொண்டர்களின் பாதுகாப்பும் கருதி விஜய் தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாக மாற்றியுள்ளார். “தளபதி முன்னாடி நிக்கணும்னு ஆசைதான், ஆனா கூட்டம் இப்படி எகிறினா பாதுகாப்பு என்னாச்சு?” எனத் தொண்டர்கள் கவலையில் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.
இனி மிக முக்கியமான தொகுதிகளுக்கு மட்டுமே நேரில் செல்லத் திட்டமிட்டுள்ள விஜய், மற்ற தொகுதிகளுக்கு ஒரு புதிய ‘டிஜிட்டல்’ ஐடியாவைக் கையில் எடுத்துள்ளார். அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்து விஜய் பேசும் வீடியோக்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு, பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட உள்ளன. “நேர்ல வரலனாலும், டிஜிட்டல்ல வந்து ஸ்கோர் பண்ணப்போறாரு தளபதி!” என நெட்டிசன்கள் விஜய்யின் இந்த ஹைடெக் தேர்தல் வியூகத்தைப் பார்த்து வியந்து வருகின்றனர்.
