தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய தமிழக அரசியல் களம் குறித்து மிக அதிரடியான மற்றும் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்காகத் திமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற அதிர்ச்சி தகவலை அவர் ஓப்பனாக உடைத்துள்ளார்.

வாழ்நாள் முழுவதும் எம்ஜிஆரும், ஜெயலலிதா அம்மாவும் தீவிரமாக எதிர்த்த ஒரு கட்சியுடன், வெறும் பதவி ஆசைக்காக இபிஎஸ் கூட்டுச் சேர முயன்றது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களுக்கும் இழைக்கப்பட்ட பச்சைத் துரோகம் என்று அவர் காரசாரமாகச் சாடியுள்ளார். ​மேலும் இந்த ரகசியச் சூழ்ச்சியின் பின்னணியைப் பிரித்து மேய்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “இபிஎஸ்ஸும் மு.க.ஸ்டாலினும் இணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்ட இந்த ரகசியத் திட்டத்தை கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால்தான் அது டோட்டலாகத் தோல்வியில் முடிந்தது;

அதன் பிறகே ‘நாங்கள் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று மு.க.ஸ்டாலின் நாடகமாடி அறிக்கை விட்டார்” என்று வெளுத்து வாங்கியுள்ளார். இதனால் தலைமை மீது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்த அதிமுக தொண்டர்களும், முன்னாள் அமைச்சர்களும் இப்போது தவெக-வைத்தான் தங்களின் ‘புதிய அதிமுக-வாக’ப் பார்க்கிறார்கள் என்றும், அதனால்தான் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மக்கள் சேவைக்காகத் தவெக-வில் மாஸாக இணைந்து வருகிறார்கள் என்றும் அவர் முழங்கியுள்ள பேட்டி தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.