அமெரிக்கா–மெக்சிகோ இடையிலான தக்காளி இறக்குமதி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவின் தக்காளி சந்தையில் சுமார் 70 சதவீதத்தை மெக்சிகோ நாடு வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளிக்குப் 17 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், தக்காளி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னைய காலங்களில் அமெரிக்கா பல்வேறு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதித்து வந்த நிலையில், அண்டை நாடான மெக்சிகோவும் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நடவடிக்கை, அமெரிக்க தக்காளித் தொழிலுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இனி அமெரிக்காவில் உண்ணப்படும் தக்காளிகள், பெரும்பாலும் அங்கேயே பயிரிடப்படும் நிலையை உருவாக்க இந்த முடிவு வழிவகுக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்