துருக்கி நாட்டின் தலைநகர் அங்காரா. இந்த பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த அடுக்குமாடி கட்டடத்தில்  20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்த நிலையில் குடியிருப்பில் 4- வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மளமளவென கட்டிடத்தின் மற்றப் பகுதிகளுக்கும் பரவியது.

இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சில மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

அதற்குள் தீ விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் உடல் கருவி உயிரிழந்தனர். மேலும் 30 பேருக்கு மேல் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.