ஏமன் நாட்டின் அல்- ஹாஷ்மா பகுதியில் உள்ள மைதானத்தில் 5 சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதால் கால்பந்து விளையாடி கொண்டிருந்த 5 சிறுவர்கள பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குண்டு வீச்சில் சிறுவர்களின் உடல்கள் வெடித்து சிதறி உள்ளது.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்ததாகவும், இதற்கு மனித உரிமை அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தங்களது சாட்சிகளை கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஏமன் நாட்டின் மனித உரிமையாளர்கள் குழு சிதைந்த குழந்தைகளின் உடல்களை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த குண்டு வீச்சில் இறந்த 5 சிறுவர்களில், இருவருக்கு 12 வயதும், மற்ற இருவருக்கு 14 வயதும், 5-வது குழந்தையின்‌ வயது தெரியவில்லை எனவும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பகுதி ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், இல்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் பிறப் போராளிகளுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டு போரின் முக்கிய களமாக இருந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏமன் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது ஹவுதிகள் இந்த பகுதியை கைப்பற்றினர்.