இந்திய மக்களுக்கு பொதுவாக தங்கம் என்றாலே மிகவும் பிடிக்கும். இன்றைய டிஜிட்டல் காலத்தில் தற்போது பலரும் டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல்வேறு அவசர காலங்களில் தங்கமானது நமக்கு பயன்படும் நிலையில் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தற்போது டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த டிஜிட்டல் தங்கத்தில் ஏராளமானோர் முதலீடு செய்து வரும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் வாங்கி விற்பனை செய்து கொள்ளலாம். இதில் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் செலவுகள் போன்றவைகள் கிடையாது.

இந்நிலையில் 24 கேரட் சுத்தமான தங்கத்தை நீங்கள் உங்களுடைய மொபைல் செயலியில் வாங்கிக் கொள்ளலாம். அந்த வகையில் தற்போது போன் பே செயலியில் எப்படி டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் உங்களுடைய செல்போனில் Phonepe‌ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கீழே உள்ள wealth என்ற பிரிவை கிளிக் செய்து கோல்டு என்ற பகுதிக்குள் செல்ல வேண்டும். அதில் Buy one time என்பதை கிளிக் செய்து விட்டு நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு தங்கம் வாங்க விரும்புகிறீர்களோ அந்த தொகையை பதிவிட வேண்டும். மேலும் கடைசியாக நீங்கள் தொகையை செலுத்தினால் உங்களுக்கு டிஜிட்டல் தங்கம் கிடைத்துவிடும்.