இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான பொது மக்களின் முக்கியமான கனவு சொந்த வீடு. பொதுவாக நிறைய பேர் சொந்த வீடு கட்டுவதற்கு போதிய அளவு பணம் கிடைக்காததால் கடன் வாங்கவே எண்ணுவர். குறிப்பாக வங்கிகளில் தான் பெரும்பாலும் வீடு கட்டுவதற்கு கடன் வாங்குவார்கள். இந்நிலையில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் வீட்டு கடன்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி வீட்டு கடன்களுக்கு கோடக் மகேந்திரா வங்கியில் 8.65 சதவீதம் வரை வட்டி இருக்கிறது. அதன்பிறகு சிட்டி பேங்கில் 6.80 சதவீதமும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 8.85 சதவீதமும், பேங்க் ஆப் பரோடாவில் 8.60 சதவீதமும், பேங்க் ஆப் இந்தியாவில் 8.65 சதவீதமும், எஸ்பிஐ வங்கியில் 8.75 சதவீதமும், HDFC வங்கியில் 8.60%, ஆக்சிஸ் பேங்கில் 8.60%, கனரா வங்கியில் 8.55 சதவீதமும், பஞ்சாப் & சிந்த் பேங்கில் 8.60%, IDFS First பேங்கில் 8.75 சதவீதமும், பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் 8.35 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது.

மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 9.30 சதவீதமும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8.55 சதவீதமும், யூசிஓ வங்கியில் 8.75 சதவீதமும், ஐடிபிஐ பேங்கில் 8.75%, HSBC வங்கியில் 8.35%, கரூர் வைசியா வங்கியில் 8.95%, ஜம்மு & காஷ்மீர் வங்கியில் 8%, பெடரல் வங்கியில் 9.90%, தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்கில் 8.75%, கர்நாடகா வங்கியில் 8 புள்ளி 67 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது.