இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரதான் மந்திரி அம்பலயா பட் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 6000 நிதி உதவி வழங்கி வருவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பிஐபி நிறுவனம் ஆய்வு நடத்தியதில் அந்த தகவல் முற்றிலும் போலியானது என்பது கண்டறியப் பட்டுள்ளது.

அதாவது மத்திய அரசின் திட்டம் என்று கூறி இளைஞர்களிடம் மோசடி வேலை நடைபெறுகிறது. இது போன்ற போலியான தகவல்களில் இருந்து பொதுமக்களும் இளைஞர்களும் விலகி இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளதோடு மத்திய அரசு தொடர்பான திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் மட்டுமே சென்று பார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற போலியான தகவல்கள் எதுவும் பரவினால் அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள‌ 918799711259 என்ற தொலைபேசி எண்ணுக்கோ social [email protected] என்ற இணையதள முகவரிக்கோ சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு மோசடி வேலைகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அனைவரும் கவனத்துடன் இருப்பதோடு செல்போனுக்கு வரும் குறுந்தகவல்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுந் தகவல்கள் போன்றவற்றை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.