நம்முடைய மொபைலுக்கு பயன்படுத்தும் நெட்வொர்க் சிம்மை மற்றொரு நெட்வொர்க்கிற்கு சுலபமாக மாற்றும் வசதி உள்ளது போல விசா, மாஸ்டர் கார்டு,ரூபெ அல்லது உங்களுக்கு விருப்பமான நெட்வொர்க் இடையே மாற்றுவதற்கான விருப்பம் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றத்திற்கான திறனை வாடிக்கையாளர்கள் பெற முடியும். நம்முடைய மொபைல் எண்ணை மாற்றாமல் மற்ற நெட்வொர்க்குக்கு நமது சின்மையும் மாற்றிக் கொள்வது போல இந்த வங்கி அட்டை பரிவர்த்தனையும் காணப்படும்.

இதன் மூலமாக வங்கியில் இருக்கும் இருப்புகள் மற்றும் அட்டை கணக்குகள் என அனைத்தும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மாற்றிக் கொள்ள முடியும். இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அட்டை நெட்வொர்க்களில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கிங் கார்ப்பரேஷன், டைனர்ஸ் கிளப்பு இன்டர்நேஷனல் லிமிடெட், மாஸ்டர் கார்டு ஆசியா மற்றும் பசிபிக் பிடீ ஆகியவை அடங்கும். இந்த நடைமுறை விரைவில் மாற்றப்பட உள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இனி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் அட்டை வழங்கும் நேரத்தில் அல்லது பிற்காலத்தில் பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.