இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. எல்லா மாநிலத்திலும் உண்டு. அந்த வகையில் கடந்த 2013 ஆம் வருடம் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் அரசு ஊழியர்கள் யாரும் சாதாரண கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் மின் கட்டணம் செலுத்துவதில் அவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அம்மாநிலத்தில் அதிகரித்து வரும் மின் நுகர்வின் காரணமாக அரசு ஊழியர்களுடைய மின்கட்டணம் தொடர்பான அரசாணையை அரசு வாபஸ் பெற்றிருக்கிறது. அரசின்ன் இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக அரசு குடியிருப்பில் வசிக்கும் அரசு ஊழியர்களும் இனி சாதாரண மக்களை போலத்தான் மின்கடணம் செலுத்துவார்கள் எனவும் அவர்களுக்கு எந்தவித சலுகைகளும் கிடைக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.