2023-24 ஆம் நிதி ஆண்டில் மத்திய பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்பட்ட போது ஏழு லட்சம் வரை வருமானத்தில் ஈடுபடுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இது குறித்து பல சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில் அது குறித்து தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் எந்த கட்டத்தில் வரி செலுத்துகிறீர்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கான விபரங்களை திரட்டினோம். அதில் 7.27 லட்சத்திற்கு நீங்கள் எந்த வரியும் செலுத்த வேண்டாம்.

இப்பொழுது 27 ஆயிரம் தான் பிரேக் ஈவன் வருகிறது. அதன் பிறகு வரி செலுத்த தொடங்குவீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் 2013 14 ஆம் நிதி ஆண்டில் 3,185 கோடியுடன் ஒப்பிடும்பொழுது 2023 24 நிதியாண்டிற்கான சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் பட்ஜெட் ஆனது 22 ஆயிரத்து 138 கோடி அதிகரித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 2014ல் 142 இல் இருந்து 2019 இல் 63 வது இடத்திற்கு தொழில் செய்ய எளிதான குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை மேம்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.