தமிழகத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் மதுக்கடைகள் இயங்காது.

இந்த மூன்று நாட்களும் ‘உலர் தினங்களாக’  கடைபிடிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மட்டுமின்றி, அவற்றுடன் இணைந்த பார்களும் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும்.

விதிகளை மீறி மது விற்பனை செய்யக்கூடாது என்று கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அரசு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த அறிவிப்பை பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.