நீலகிரியில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனைப் போலவே பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து பத்து ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த புதிய நடைமுறை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.