அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் காலனி தெருவில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீலா(22) என்ற மகள் இருக்கிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு ஷீலா வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஷீலாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தங்கராசு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஷீலாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.