சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பயணம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதில் பயணிகள் தங்களின் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் அட்டையை காண்பித்து பயணம் செய்யும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் நுழைவு வாயிலில் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டையை காண்பித்தாள் உள்ளே செல்ல தானாக அனுமதி கிடைக்கும். அதற்கான பயண கட்டணம் வங்கி கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் எனவும் இது குறித்த விவரங்கள் கைபேசியில் அனுப்பப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.