மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக சார்பாக தனியார் மஹால் ஒன்றில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில், அதிமுக கழக மகளிர் அணி செயலாளர்  வளர்மதி முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ராஜன் செல்லப்பா மற்றும் வளர்மதி ஆகியோர் திமுக அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் குறித்து  குறித்து விமர்சனம் செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியின் பேசிய பிறகு வடிவேலு பட காமெடி போல கடைசில மண்ட மேல இருந்து கொண்டைய மறந்துட்டேன் என்பது போல மதுரையில் சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு  நூலகத்தின் எழுத்துப் பிழையை கண்டுபிடித்து அதிமுகவினர் விமர்சனம் செய்தார்கள். ஆனால் நேற்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் “அலோசனைக் கூட்டம்” என்றும் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் அடித்து கூட்டம் நடத்தி அதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டது கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களிடையே  சலசலப்பை ஏற்படுத்தியது.