இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் sbi மற்றும் icici வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் sbi மற்றும் icici வங்கி rupayகிரெடிட் கார்டுகளுடன் யுபிஐ பரிவர்த்தனை பெரும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் கார்டை யுபிஐ ஆப்சனுடன் இணைப்பதன் மூலமாக பெறலாம். அதேசமயம் இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தால் இயக்கப்படும் BHIM செயலியில் இந்த புதிய வசதி கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி உடன் எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைப்பதன் மூலமாக வாடிக்கையாளர்கள் விரும்பும் எந்த இடத்திலும் merchant UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முடியும். இந்த BHIM செயலி 11 வங்கிகளின் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைக்க அனுமதிக்கின்றது. வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவதை போலவே ஒருவர் தங்கள் ரூபே கிரெடிட் கார்டை பயன்படுத்தி யூ பி ஐ பணம் செலுத்தலாம். அதன் பிறகு கிரெடிட் கார்டில் இருந்து தொகை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.