மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்வது வழக்கம். சில சமயத்தில் டிக்கெட் கிடைக்காது. ரயில் டிக்கெட் எடுப்பதில் சில நேரங்களில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு விடுகிறது. டிக்கெட் புக் செய்த பிறகு திடீரென்று சில காரணங்களால் அதை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது டிக்கெட் பணம் வீணாகிவிடும்.

ஆனால் இனி அதற்கு கவலை இல்லை. உங்களுடைய டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றக்கூடிய வசதியை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அதாவது பயணிகள் தங்களுடைய டிக்கெட்டை தாய், தந்தை, சகோதரி, மனைவி, கணவன், மகள் போன்ற குடும்ப உறுப்பினருக்கு மாற்றிவிடலாம். நண்பர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்கள் இந்த ரயில் டிக்கெட் பயணம் செய்ய முடியாது. முதலில் அந்த டிக்கெட்டில் பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் பக்கத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். டிக்கெட் யாருடைய பெயரில் மாற்றப்படுகிறது அந்த நபரின் ஆதார் அட்டை அடையாளச் சான்றை எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு விண்ணப்பிப்பது மூலம் மாற்றிக் கொள்ளலாம்.