இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் அதிக அளவு ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானம் பெற பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. அதன்படி 60 வயதிற்கு மேற்பட்ட பென்ஷன் தாரர்களுக்கு பல வகையான திட்டங்களை lic வழங்கி வருகின்றது. அதில் முக்கியமான ஒன்றுதான் சாரல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக ஓய்வு காலத்தில் பயன் பெறும் வகையில் 40 வயதிலிருந்து சேமிக்கும் படியான அருமையான திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் இணையும் போது பாலிசிதாரர் ஒருமுறை மட்டுமே ப்ரீமியம் தொகையை செலுத்த வேண்டும்.

இந்தத் தொகையை செலுத்திய பின்னர் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் முதல் பெற்றுக்கொள்ளலாம். மாதாந்திர அடிப்படையில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை விருப்பத்தின் அடிப்படையில் பென்ஷன் தொகையை பெற்றுக் கொள்ள முடியும். ஒருவேளை பாலிசிதாரர் பாதியிலேயே இறந்துவிட்டால் பென்ஷன் செய்த தொகையை நாகினிக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் கணக்கு தொடங்கிய பாதியிலேயே டெபாசிட் செய்த பணத்தை பென்சன்தாரர் பெற விரும்பினால் கணக்கு தொடங்கி ஆறு மாதத்திற்கு பிறகு டெபாசிட் செய்த தொகையை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.