கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் காய்கறி விலை உயர்வால் மதிய உணவு திட்ட செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூடுதல் நிதி ஒடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உதாரணமாக தக்காளி விலை எடுத்துக்கொண்டால் ஒரு கிலோ 120 ரூபாயை தாண்டி உள்ளது. பீன்ஸ், கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறியும் உயர்ந்துள்ளது. முட்டை விலையும் 7 ரூபாயை தாண்டி விட்டது. இதனால் நிதி நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதை சரியாக கையால விட்டால் ஊட்டச்சத்து இல்லாத உணவை தான் மாணவர்களுக்கு வழங்க நேரிடும். எனவே அரசு தலையிட்டு மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மதிய உணவை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.