இந்தியாவில் நடுத்தர மக்கள் பலரும் தற்போது தபால் நிலைய திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இந்த திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் இருந்து சேமிக்க முடியும். மத்திய அரசு சமீபத்தில் தொடர் வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை 6.2 சதவிதத்தில் இருந்து 6.5% ஆக உயர்த்தியது. RD திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் முதலீடு செய்தால் முதிர்ச்சி காலத்தின் போது 1,41,983 ரூபாய் கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் முதலீடு என்றால் ஒரு நாளைக்கு 66 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதில் உங்களுக்கு 21 ஆயிரத்து 983 ரூபாய் வட்டி கிடைக்கும். அதுவே இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4000 ரூபாய் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் இரண்டு லட்சத்து 83 ஆயிரத்து 968 ரூபாய் கிடைக்கும். அதாவது தினசரி 133 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 48 ஆயிரம் முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலத்தில் 43 ஆயிரத்து 968 ரூபாய் வட்டி விகிதத்தில் மொத்தமாக 2,83,968 ரூபாய் கிடைக்கும்