தமிழகத்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பல மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக கர்நாடகாவில் உள்ள 1.1 கோடி பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண்களுக்கு வழங்கப்படுவது போல கடவுள் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்ற அம்மாநில முதல்வர் சித்தராமையா சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.