இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள். இதற்காக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட ஆன்லைன் பேமெண்ட் செய்திகளை பயன்படுத்துகிறார்கள். இந்த சேவைகள் UPI கீழ் செயல்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதற்கு வங்கி கணக்குடன் தொடர்புடைய யுபிஐ மூலம் டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த நிலையில் ஓராண்டுக்கு மேல் பரிவர்த்தனை செய்யாத யுபிஐ-கள் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு செயலிழந்து விடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது அனைத்து வங்கிகளும் கூகுள் பேய் மற்றும் போன் பே போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் ஒரு வருடத்திற்கு மேலாக எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் அந்த UPI ஐடி டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு தடை செய்யப்படும். இதன் மூலமாக தவறான நபரில் கணக்கில் பணம் செலுத்துவது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.