உத்திரபிரதேசம் மாநிலத்தில் பள்ளிக்கல்வித்துறை புதிதாக பல மாற்றங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் மாற்றங்களுக்கான புதிய கல்விக் கொள்கையை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி வாரத்தில் மொத்தம் 29 மணி நேரம் பாடம் கற்பிக்கப்படும் எனவும் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து முதல் 5.30 மணி நேரம் வரை வகுப்புகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறையாக இருக்கும். பொது பாடங்களுக்கு அதிகபட்சம் 45 நிமிடங்கள், முக்கிய பாடங்களுக்கு 50 நிமிடங்கள் வரை வகுப்புகள் நடத்தப்படும். ஆண்டுதோறும் பத்து நாட்கள் மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வருவார்கள். அந்த நாட்களில் மாணவர்களுக்கு வாய் வழி சோதனைகள் மற்றும் கற்பித்தல்கள் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.