இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆதார் கார்டில் உள்ள விவரங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் புதுப்பித்து கொள்ளலாம்.

அதிலும் குறிப்பாக பெண்கள் திருமணத்திற்கு பிறகு பெயர் மற்றும் முகவரியை கட்டாயம் மாற்ற வேண்டும். அதனை செய்வது மிகவும் எளிதான ஒன்றுதான். நீங்கள் உங்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று அங்கு படிவத்தை வாங்கி அதில் கேட்கப்படும் விவரங்களை சரியாக பதிவிட்டு அத்துடன் நீங்கள் மாற்ற வேண்டிய விவரத்திற்கான ஆவணத்தை இணைக்க வேண்டும். இறுதியாக உங்களது பயோமெட்ரிக் பதிவு செய்யப்படும்.