இன்றைய காலகட்டத்தில் வங்கிக் கணக்கின் மூலம் பணம் கைகளில் இல்லாமல் கிரெடிட் கார்டு மூலமாக மக்கள் அனைவரும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். அவசிய தேவையின் போது மிகவும் கை கொடுக்கும் கிரெடிட் கார்டு சில நேரங்களில் நமக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும். ஒரு சிலர் கிரெடிட் கார்டை வாங்கி பயன்படுத்தாமல் நீண்ட காலத்திற்கு அதனை அப்படியே வைத்திருப்பார்கள். அப்படி பயன்படுத்தாத நேரத்தில் கிரெடிட் கார்டை டி ஆக்டிவேட் செய்வது நல்லது.

இல்லையென்றால் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பயன்படுத்தாத கிரெடிட் கார்டுகளை அவர்களாகவே டி ஆக்டிவேட் செய்து விடுவார்கள். இந்த நிலையில் செலுத்தாத கிரெடிட் கார்டு பில்களுக்கான வட்டி தொகை அதிகரித்து நமக்கு எதிர்பாராத ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் தேவையின் போது அதனை சிறு சிறு பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திக் கொள்வது நல்லது அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனை தேவையில்லை என்றால் அதன் கணக்கை நீங்கள் முடித்து விடுவது தான் சரி