சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ உலகில் ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளனர். எலும்பு புற்றுநோயால் (Malignant Bone Tumor) பாதிக்கப்பட்ட பிரபாகரன் என்பவரின் விலா எலும்பில் சுமார் 5 கிலோ எடையுள்ள மிகப்பெரிய கட்டி வளர்ந்திருந்தது. இதனால் சுவாசிக்கக் கூட முடியாமல் தவித்து வந்த அவருக்கு, மருத்துவர்கள் மிகச் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
சுமார் 5 கிலோ எடையுள்ள அந்தப் புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள், அந்த இடத்தில் ‘டைட்டானியம்’ (Titanium) உலோகத்தால் ஆன செயற்கை விலா எலும்பைப் பொருத்தி சாதனை படைத்துள்ளனர். இவ்வளவு பெரிய கட்டி அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக டைட்டானியம் எலும்பு பொருத்தப்படுவது ஒரு அபூர்வமான மருத்துவ சாதனையாகக் கருதப்படுகிறது. தற்போது பிரபாகரன் நலமுடன் இருப்பதாகவும், அரசு மருத்துவர்களின் இந்த அசாத்திய திறமையை மருத்துவ உலகமே வியந்து பாராட்டி வருகிறது.
