தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுடைய வசதிக்காக அரசு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டமானது ஒவ்வொரு மாதமும் மேம்படுத்தப்பட்டு வருகிறது அதாவது குழந்தைகளுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இயற்கையாக விளையும் காய்கறிகளை கொண்டு காலை சிற்றுண்டி தயார் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து இலவச நலத்திட்டங்கள் மற்றும் காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளான கிறிஸ்தவ பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் சீக்கிரம் முதல்வர் அவர்களிடம் ஆலோசனை நடத்தி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் அறிவித்தார்.