தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். அதில், ஊராட்சிகளின் நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினமான வரும் ஆக. 15ம் தேதி, நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி வளர்ச்சிக்கான தேவைகள், பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் பள்ளி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அடுத்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது