கல்லூரி மாணவர்களுடைய கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், அவர்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும், உயர் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு மாதிரி பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மாணவர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு 90 சதவீத அரசு உயர் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய கல்லூரியின் தன்மைக்கு ஏற்ப சில மாற்றங்களோடு மாதிரி பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளன.

இந்த நிலையில் மாதிரி பாடத்திட்டத்தின் நோக்கத்தினை விளக்க உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடித் தலைமையில் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய மாதிரி பாட திட்டம் 70% தன்னாட்சிக் கல்லூரியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாதிரி பாடத்திட்டத்தை தங்களுடைய கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.