தமிழக அரசு எஸ் டி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதற்கான நிதியை மத்திய அரசும் ஒவ்வொரு வருடம் ஒதுக்கி வருகிறது அந்த வகையில் 2018 19 முதல் 2022 2023 வரையிலான 5 வருடங்களில் 3,019,65,00,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல 2018-19 நிதியாண்டு 153 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் ஒவ்வொரு வருடமும் படிப்படியாக குறைக்கப்பட்ட கடைசியாக கடந்த வருடம் 2022- 23ம் நிதியாண்டில் வெறும் 159.78 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் எஸ்சி எஸ்டி நலத்துறைக்கு 2017-18 முதல் 2021- 22 நிதியாண்டு வரை ஒதுக்கிய நிதியில் 927 கோடி பயன்படுத்தாமல் அரசின் கஜானாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல மத்திய அரசின் நிதியும் 90 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் வாழும் எஸ்சி எஸ்டி மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.