மத்திய அரசு விவசாயிகளுக்கு 6000 தொகையை மூன்று தவணைகளாக பிரித்து 2000 ரூபாய் வீதம் அளித்து வருகிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்களுடைய ஆதாரை வங்கி கணக்கு வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்து உள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காத விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்படாது என்று கூறப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் 6259 விவசாயிகள் பயன்பாடுவதாகவும், 5217 பேர் இதுவரை வங்கி கணக்குடன் ஆதாரக் இணைக்கவில்லை எனவும் எனவே இவர்கள் உடனடியாக வங்கி கணக்கை இணைக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு இல்லாதவர்கள் ஜீரோ பேலன்ஸ் அடிப்படையில் வங்கி கணக்கு தொடங்கி அதில் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.