ஜெயிலர் படத்தில் மறந்தும் செய்யக்கூடாத செயல் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

ஜெயிலர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. இதை தொடர்ந்து பலரும் ஜெயிலர் திரைப்படத்தை காண ஆர்வமாகி உள்ள நிலையில், வார இறுதி நாட்களான சனி ஞாயிறுகளில் படத்திற்கான டிக்கெட் கிடைப்பதே கடினமானது தான் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. நீங்கள் ஜெயிலர் திரைப்படத்தை காண செல்கிறீர்களேயானால் ,

உங்களது ஆர்வத்தை கட்டுப்படுத்தி இந்த தவறை செய்யாமல் தப்பித்துக் கொள்ளுங்கள். ராஜ்ய சபாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்பட ஒலிப்பதிவு சட்ட மசோதாவில் மாற்றம் கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,

திரைப்பட ஒளிப்பதிவு திருட்டு மூலமாக இந்தியாவில் சினிமா துறைக்கு ரூபாய் 20000 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அதை தடுப்பதற்காக திரையில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதும் தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படுகிறது. இதன்படி,

வீடியோ எடுப்பவர்கள், சமூக வலைதளங்களில் அதை பகிர்வோர் ஆதாரத்துடன் சிக்கினால், சம்மந்தப்பட்ட நபருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் படத்திற்கான தயாரிப்பு செலவில் 5% அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேலை ஜெயலர் திரைப்படத்தை காணும் போது ரஜினி காந்த் அவர்களின் அறிமுக காட்சியை நீங்கள் வீடியோ எடுக்கும் தருணத்தில் மாட்டிக்கொண்டால் படத்திற்கான மொத்த பட்ஜெட் ரூ 200 கோடி எனில் அதில் 5% ஆன 10 கோடி ரூபாய் உங்களுக்கு அபராதமாக விதிக்கப்படும் என்பதை கவனத்தில் வைத்துக் கொண்டு படத்தை திரையரங்கில் மகிழ்ச்சியுடன் கண்டு களியுங்கள்.