இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு வருபவர்களுக்கு விசா தேவை இல்லை என்று அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறியுள்ளார். இந்தியாவுடன் சேர்த்து மேலும் 32 நாட்டில் இருந்து வருபவர்களுக்கும் விசா தேவை இல்லை என்று கூறப்படுகிறது. அதிக சுற்றுலா பயணிகள் ஈரானுக்கு வரவேண்டும் சுற்றுலாத்துறை மேம்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, கென்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.