இவன் புகழ் அழியாது… சிங்கம் இறையாகாது…” என்ற உணர்ச்சிகரமான பாடல் வரிகள், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் வெற்றி முழக்கமாக மாறியுள்ளன.
கடந்த சில நாட்களாகத் தலைவர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து திட்டமிட்டுப் பரப்பப்பட்ட அவதூறுகளும், சர்ச்சைகளும் அவரது ஆதரவாளர்களைக் கவலையில் ஆழ்த்தியிருந்தன. ஆனால், மகளிர் தின விழாவில் அவர் காட்டிய அரசியல் முதிர்ச்சியும், ஊழலுக்கு எதிரான அதிரடிப் பேச்சும் அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கியுள்ளன.
“வீழ்வார் என நினைத்தாயோ?” என்ற பாணியில், மீண்டும் ஒரு சிங்கமாக அரசியல் களத்தில் அவர் கர்ஜிப்பதைக் கண்டு, அவரது ரசிகர்கள் இந்தத் துள்ளலிசைப் பாடலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த மீள்வருகையை ரசிகர்கள் ஒரு மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
சர்ச்சைகளில் சிக்கி முடங்கிவிடுவார் என எதிர்பார்த்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மக்கள் நலத் திட்டங்களையும் பட்ஜெட் கணக்குகளையும் அவர் முன்வைத்த விதம், அரசியலில் அவர் எவ்வளவு ஆழமாகத் தடம் பதித்துள்ளார் என்பதை நிரூபித்துள்ளது. “நீங்க தந்த சந்தோஷம்… நாங்க நன்றி சொல்லும் நேரம்” எனத் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள், விஜய்யின் ஒவ்வொரு சொல்லையும் செயவையும் ஒரு கனவாகச் சுமந்து 2026-ஐ நோக்கிப் பயணிக்கத் தயாராகிவிட்டனர்.
🔥🔥🔥
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_NewsTrichy) March 7, 2026
“>
அவதூறுகளைத் தாண்டி, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு தலைவராக விஜய் மீண்டும் எழுந்துள்ளதை இந்த இணையப் பதிவுகள் பறைசாற்றுகின்றன.
