2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இடையிலான ரகசியப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண், விஜயைத் தொடர்புகொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு மெகா கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு வரும் சூழலில், பவன் கல்யாணின் இந்தத் தூது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தனது கொள்கை விளக்கக் கூட்டங்களில் பாஜக-வை ‘கருத்தியல் எதிரி’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ள விஜய், இந்தக் கூட்டணியில் இணைவாரா அல்லது 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருப்பாரா என்பது இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள தவெக வேட்பாளர் பட்டியலின் மூலம் தெரியவரும்.
