Hdfc வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது எச்டிஎப்சி வங்கி ஆஃப்லைன் ரீடைல் பேமென்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரை ரிசர்வ் வங்கி ஒப்புதலுக்காக இந்த வங்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி ஆஃப்லைன் ரீடைல் பேமென்ட் முறைக்கு அனுமதி வழங்கி உள்ளது.

அதாவது இந்த ஆஃப்லைன் ரீடைல் பேமென்ட் வசதியின் மூலமாக வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதனால் கிடைக்காத நேரத்தில் பண பரிவர்த்தனைக்காக போராட வேண்டியது கிடையாது. மேலும் இந்த ஆஃப்லைன் ரீடைல் பேமென்ட் செய்யவது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.